எம்மை புரிந்து கொள்ள

தமிழர் தம் பண்பாட்டு மூல வேர்களில் அரங்க ஆற்றுகை கலைகளுக்கு தனிச் சிறப்பியல்புகள்  உண்டு. அது ஆடல், பாடல், ஆற்றுகை,  புதுமையான முயற்சிகள் என நீண்டு செல்லும் பட்டியலாகும். இந்த ஆற்றுகை சார் கலைகளை ஆவணப்படுத்துவதும் அடுத்துவரும் சந்ததிக்கு கையளிக்க உலக அளவில் அடையாளப்படுத்துவதும் அத்தியாவசிய கடமையாகிறது. இதனை  ஒரு அரங்க தளத்தில் நின்று ஒன்று சேர்த்து உலகறியச் செய்ய நினைக்கிறது இந்த கூத்தகம் இணையம்.
நாம் ஆவணப்படுத்த வேண்டியவை நிறையவே உள்ளது. தடைகளைத் தாண்டி உலகப்பரப்பில் நம் அடையாளத்தை நிறுவ உலகம் முழுவதும் சிதறிகிடக்கின்ற அரங்க ஆளுமைகள், அரங்க கலைஞர்கள், அரங்ககக்குழுக்கள், அரங்க ஆர்வலர்கள் ஆகியவர்களுடன் இணைந்து இலங்கை, இந்தியா, புலம்பெயர்தேசம் ஆகிய மூன்று தளங்களில் இருந்து பயணிப்பதற்கு இந்த இணையதளம் உறுதுணையாய் இருக்கும்.
எனவே இந்த இணையத் தளம் உலகெங்கிலும் நடைபெற்ற, நடைபெறுகின்ற தமிழர் அரங்க செயற்பாடுகளை ஒன்றுதிரட்டி ஒரு பொதுத் தளத்தில் பதிவிடுகிறது .இது செய்தியாக, கட்டுரையாக, நூல் தொகுப்பாக, காணொளியாக, ஒலிப்பதிவாக  மேலும் பல்வேறு வகைகளில் உங்களால் படிக்க ரசிக்கக் தமிழர்களுடைய அரங்கக்கலையை தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இணையதளத்தினை புரிந்துகொள்ளுதல்.

பல்லாயிரமாண்டு பழமையும் புதிய பண்பாடுகளின் காலநீட்சியையும் பெற்றுள்ள தமிழர்கள் இன்று உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். தமிழர்கள் வாழாத நாடே இல்லை என்று சொல்லுமளவிற்கு எங்களின் உலக வெளி பரந்துள்ளது, உலகின் ஒவ்வொரு இனக் குழுமங்களுக்கும் தனித்துவமான வாழ்வியல் பண்பாட்டுத்  தொடர்ச்சியொன்று பேணப்படுகிறது. அதனடியாகவே அவர்களது இருப்பும்  வைக்கப்படுகின்றது.
எம்மை நாம் அறிந்து கொள்ள எமது முன்னோர்களை அறிதலும் அவர் தம் வாழ்வியலின்   ஆழ அகலங்களை புரிதலும் அவசியமானது. நமது இனத்தினுடைய அடையாளத்தை பேணி நமது சமூக,கலை,பண்பாட்டு விழுமியங்களை நம்முள்ளும்,ஏனைய நாட்டவர் மத்தியில் பகிர்தலும்,அவர்களுடைய தொடர்பாடலை பேணுவதும் எமது தலையாகிய கடமையாகும்.

இலக்கு.

இதுவரை நடாத்தப்பட்ட இனியும் நடக்கவிருக்கிற அரங்கு சார் முயற்சிகள், ஆற்றுகைகள் ,எழுத்துக்கள், கலை நிறுவனங்கள், கலைஞர்கள், அரங்க ஆளுமைகள் , கலை, பண்பாட்டு ,நிகழ்வுகள் என உலகெங்கும் சிதறி கிடக்கும் இந்த அறிய பொக்கிசங்களை ஒன்றாக்கி ,ஒழுங்குபடுத்தி , பொது பார்வைக்கும் உலக கலை இலக்கிய ஆர்வலருக்கும், அடுத்த சந்ததியினருக்கும் கொண்டு செல்வதும் இவைகளை ஆவணப்படுத்துதல் ஆகிய விடையங்களை இணையதளம் ஒன்றில் கொண்டு வருவது எமது இலக்கு..

இவ்வாறானதொரு முயற்சியின் பயனாக

 1.எங்களுடைய அரங்க அறிஞர்களுடைய, கலைஞர்களுடைய, ஆளுமைகளை மாண்பேற்றியும் அவர்களுடைய வரலாற்றை ஆவணப்படுத்தல்.
  1. எங்களுடைய மரபுசார்ந்த கலைநிகழ்வுகளையும், நவீன அரங்க நிகழ்வுகள், கிராமியக் ஆட்ட நிகழ்வுகளையும் சேகரித்தலும் பாதுகாத்தலும்
  1. அரங்கு சார்ந்த புத்தகங்கள், சஞ்சிகைகள், நாடக எழுத்துருக்கள், ஆய்வுகள், கட்டுரைகள். செவ்விகள், ஒளிப்படங்கள், ஒலிப்பதிவுகள் அனைத்தையும் சேகரித்தல்.
  1. அடுத்த சந்ததியினரும் அரங்கு சார்ந்து கல்வி கற்பவர்களுக்கும் எங்களுடைய கலை பண்பாட்டு விடையங்களை ஒரு தளத்தினூடாக கொண்டு சேர்த்தல்.
  1. வெளிநாட்டவரும் ஏனையவர்களும் தெரிந்து கொள்ளக்கூடியவாறு எங்களுடைய அரங்கு சார்ந்த விடையங்களை கொண்டு செலுத்தல்.
  1. உலகெங்கும் வாழும் கலை ஆர்வலர்களுக்கும் மக்களுக்கும் பயன் பெற வழி செய்தல்.
  1. உலகப் பொது நிலையில் தமிழர் அரங்க முயற்சிகளையும் வடிவங்களையும் தகவல்களையும் அறிந்து கொள்ளத்தக்க ஊடகமாக செயற்படுதல்.
  1. மாணவர்களுக்கான கல்வியில் அரங்கு சார்ந்த விடையங்கள்.
உலகம் முழுவதும்  அரங்க செயல்பாட்டில் இருக்கின்ற அரங்கு சார்ந்த தகவல்கள், இணையதளங்களின் முகவரியையும் எமது தளத்தில் இணைத்து கொள்வதற்கான வழிமுறைகளும் உருவாக்கப்பட்டிருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை

நிறுவனர்-
வே .கெங்கேஸ்வரன்.








இந்தியா

கருத்துச் சொல்ல:

உங்கள் மேலான கருத்துக்களையும் மேற்கண்ட மின் அஞ்சல் முகவரிக்கே அனுப்பவும்.அரிதாரம் இணையதளத்தில் வரும் அனைத்து படைப்புகளுக்கும் ,கட்டுரைகளுக்கும், கருத்துகளுக்கும் அதை எழுதியவர்களே பொறுப்பாவார்கள். அதற்கு அரிதாரம் இணையதளம் எவ்வகையிலும் பொறுப்பேற்றுக் கொள்ளாது.


உங்களிடம் இருக்கும் அரங்கு சார்ந்த விடையங்களை, நிகழ்வுகளை, படைப்புகளை அனுப்ப விரும்புவோர்

உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:

kooththakam@gmail.com