
நவாலியூரான் ( நவாலியூர் நா.செல்லத்துரை)
நவாலியூரான் ( நவாலியூர் நா.செல்லத்துரை)
கலை இலக்கிய ஆளுமையும், எளிமையும், நட்புறவும் கொண்ட மிகப்பெரும் கலைஞன் நவாலியூரான். இவர் நாடகம், திரைப்படம், நாவல், சிறுகதை, கவிதை, சிந்து நடைக்கூத்து எனப் பல துறைகளில் வல்லவர்.
இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல நாடக இயக்குனரும் கூட. ஏறத்தாழ 55 சமூக நாடகங்களில் சமூக அவலங்களையும்இ இழிவு நிலையையும் வெளிக்காட்டியுள்ளார். அதாவது “சதியின் பதி” 1959 சித்திரை 26 அன்று உயிலங்குளம் வெளியரங்கில் “வெட்டகுமாரன்” 1960 ஆவணி கண்டி திரித்துவக் கல்லூரி “நினைவுச் சின்னம் – 1960”, “நீங்கள் ஓர் இஸ்லாமியனா – 1963”, “எதிர்பாரா முடிவு – 1965”, “நல்ல தீர்ப்பு – 1965”, “அடிமை விலங்கு – 1966”, “நான் நடந்த பாதையிலே – 1968”, “புதியதொரு உலகம் – 1971”, “எதற்கும் ஒரு தீர்ப்பு – 1972”, ‘நீ திருந்து உலகம் திருந்தும் – 1972”, “சாபக்கேடு – 1976”, “ ஜீவ வெளிச்சம் – 1979”, “ பழிக்குப் பழி – 1982”, “ அன்பைக் கடைப்பிடிச்சா – 1982”, “ பூமியிலே சமாதானம் – 1983”, “ ஜீவனுள்ள நாட்களெல்லாம் – 1983”, “ விசுவாசம் ஓர் அற்புத மருந்து – 1984”, “ உம்முடைய சிலுவையிலே – 1984”, “ நாளை மலரும் – 1987”, “ சுதந்திரப் போர் – 1993”, “ பட்ட மரம் – 1995”, “ அன்பு இல்லம் – 1997”, “ விடுதலையின் ஒலி – 1990”, “ “குமறி வெடிக்கும் எரிமலை”, “இலட்சிய நாயகன்”, “சித்திர குப்தன் தரும் தண்டனை”, “சீதனப் பேய்”, “நல்லவை செய்வோம்”
வரலாற்று இலக்கிய நாடக வரிசையில் “காசியப்பா” – 1962, “தாய்நாடு” – 1968, “உடன் பிறந்த உணர்ச்சி” – 1959, “சிலையெடுத்த சேரன்”- 1959, “கண்ணீர்ப்படை”- 1968, “நீதிகேட்டாள் சோழநாட்டாள்”- 1972, “சிலப்பதிகாரத்தில் சிலை எடுத்த சேரன்”, “மயானம் காத்த மன்னன்”- 1974, “தாய்மண்”-1990, “அசோகன்”- 1974, “கண்டியம்பதிக் காவலன் ”- 1976, “விதியா இது சதியா”-2001, “தாயகம்”-2005 என்பவற்றைக் குறிப்பிடலாம்.
சிந்து நடைக்கூத்து வரிசையில் “சின்னவனா பெரியவனா”-1998 “சூழ்ச்சியும் வீழ்ச்சியும்”-2007 என்பவற்றைக் குறிப்பிடலாம்.
திரைப்பட வரிசையில் “சமுதாயம்”-1962, “தோட்டக்காரி”-1963, “கடமையின் இல்லை”- 1966, “பாசநிலா”- 1966, “ராக்சி டிறைவர்”- 1966, “நிர்மலா”- 1968, “மஞசள் குங்குமம்”- 1970, “வெண்சங்கு”- 1970, “குத்துவிளக்கு”- 1972, “மீனவப்பெண்”-1973, “புதிய காற்று”- 1975, “கோமாளிகள்”-1976, “காத்திருப்பேன் உனக்காக”-1976, “பொன்மணி”-1977, “நான் உங்கள் தோழன்”-1978, “வாடைக்காற்று”- 1978, “தென்றலும் புயலும்”- 1978, “தெய்வம் தந்த வீடு”- 1978, “ஏமாளிகள்”-1978, “அநுராகம்”- 1978, “எங்களில் ஒருவன்”-1979, “மாமியார் வீடு”-1979, “நெஞ்சுக்கு நீதி”-1980, “இரத்தத்தின் இரத்தமே”-1980, “அவள் ஒரு ஜீவநதி”-1980, “நாடுபோற்ற வாழ்க”-1980, “பாதை மாறியபருவங்கள்”-1982, “ஷர்மிலாவின் இதய ராகம்”-1993, என்பவற்றைக் குறிப்பிடலாம்.
காலமுள்ளவரை போற்றப்பட வேண்டிய ஒரு மாபெரும் கலைஞன். எமது இளம் சமுதாயம் அவரிடம் நிறையக் கற்க வேண்டியுள்ளது. இன்றும் யாழ் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞனை கௌரவிக்க வேண்டியது எமது கடப்பாடாகும்.