வவுனியாவில் நடந்த நாடக விழா

/>

“பழயவை பாலாகவும் இல்லை புதுயன புழுத்துப்போகவும் இல்லை புல்லரிக்கவே வைத்திருக்கின்றன” 👇👇
நான் பார்த்த நாடக விழா இது வெறும் விழாவா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும் எல்லோரும் எல்லாமும் செய்கிறார்கள். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும் அந்த வகையில் தான் எப்போதோ திட்டமிட்டிருந்த நாடக விழாவை எப்படியோ செய்து முடித்த திருப்தி இருக்கலாம் பலருக்கு இருப்பினும் அதன் பின் உள்ள கதைகள் பற்றி எவரும் அறிவாரோ தெரியாதே.
நேற்றில்லை இன்றில்லை 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது வவுனியாவிலே நாடகங்களை விழாவாக கண்டு அதன் பிறகு 02.08.2025 அன்று பார்த்த இந்த நாடக விழா தான் வவுனியா மண்ணில் கண்டது இங்கு விறலி,ஓட்டு, நொண்டி ,ரெயில்,இராவணேசன் கூத்து அத்தோடு கூடவே ஓர் சிறுவர் நாடகம் இப்படி இந்த 5 நாடகங்களை அங்கே ஆற்றுகை செய்திருந்தனர். #சிவாலயா ஆற்றுகை குழு இந்த நாடகங்களை பற்றி கூற என்ன இருக்கிறது. உண்மையிலேயே நாடகங்கள் பாய்வையாளர்களோடு கலக்காமல் இருக்குமா என்ன இயல்பாகவே நாடகங்களுக்கு ஆட்கொள்ளும் திறன் அதிகமே என்பதால் அதை பற்றி சொல்லவா வேண்டும் மிகவும் அருமையான நாடகங்கள் அதில் சிறப்பாக ரெயில் எனும் நாடகம் நவீன நாடகம் நெஞ்சிற்கு நிறைவாய் கண்டேன்.
இவை ஒரு புறம் இருக்க இந்த நாடக விழாவின் சிறப்பு என்ன
தற்காலத்தில் எல்லோரும் வருமானம் தேடி அலையும் நேரத்தில் இந்த நாடக விழாவை தலைமை தாங்கிய Visnuraj Vijayakumar 🙏 அண்ணா செய்த பெரும் முயற்சி அது ஆச்சரியம் நிறைந்த ஒன்று ஏனெனில் நான் பார்த்த ஏனைய நாடக விழாக்களை விடவும் அதியசம் ஒன்று அது ஏனையவற்றில் எல்லாம் இளையோர் இங்கு அப்படியல்ல ஒருபுறம் இன்னும் பள்ளி படிப்பையே முழுமையாய் கற்று முடியாத பள்ளிசிறார்கள் ஒரு சில இளையோர் மறுபக்கம் பார்த்தால் எல்லாம் அறிந்து அனைத்தும் கண்டு கழித்து ஓய்வுநிலை முதியோர் இது தான் இங்கு அற்புதம் இத்தனை பெரும் மூத்த கலைஞர்களையும் ஒன்றுசேர்ப்பதொன்றும் இலகுவான தல்ல .
ஆனால் இங்க அதை சாத்திய படுத்தியதும் அவர் திறன் என்றே கூற வேண்டும் அதையும் மீறி இந்த நாடக விழாவும் எளிதாய் எட்டிவிட்டது என்றும் நினைத்து விடாதீர்கள் அதன் பின்னால் பெரும் உழைப்பு இருக்காமல் இல்லை காலநிலை கூட அதற்கு ஒரு தடை கல் தான் ஆனால் எந்த கலைஞனுக்கும் கலைக்கும் தடை ஒன்றும் பெரும் சுவர் அல்ல சிறு கல் தான் என்பதும் இந் நாடக விழாவில் காட்டிவிட்டனர். வெளி களத்திலே பிரம்மாண்டமாக நடக்க இருந்த இந்த நாடக விழாவை வர்ணபகவான் சற்று சோதித்து பார்த்தார் கிட்டதட்ட 1 1/2 மணி நேர பெரும் மழை இருப்பினும் சோரவில்லை அவர்கள் உடனடியாக அந்த விழாவை உள் மண்டபத்திலே திட்டமிட்ட தைரியமும் இன்னும் அமோகமாக செய்து காட்டி இருக்கிறார்கள்.
அது மட்டும் அல்ல இந்த நாடக விழாவிலே அதிகம் பெண்பிள்ளைகள் தான் ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா என்ன என்பதுபோல பெரும் புயலாக வீசி தகர்த்து விட்டார்கள் . அதையும் தாண்டி நான் அந்த நாடக விழாவில் கேட்ட பார்த்த ஒரு பெரும் ஆளுமை மௌனகுரு ஐயாவை இந்த வவுனியா மண்ணில் நாடகம் அரங்கியல் பாடம் கற்கின்ற மாணவர்கள் நேரில் காண்பது என்பது பெரும் வரம் போன்றது அதையும் இங்கே சாத்தியப்படுத்த முடிந்தது. அதை ஒரு சிறுவன் தனது தாயிடம் கூறியதை காதால் கேட்டேன் இப்படிப்பட்ட மிக சிறந்த அனுபவங்களையும் இந்த நாடக விழா கொடுக்க தவறவில்லை மேலும் நொண்டி போன்ற அழிந்து வருகின்ற நாடகங்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இதை நாடகங்கள் ஒருபுறம் சிறப்பித்ததை தாண்டி இந்த நாடக விழா செய்த அதன் பின்னுள்ள அற்புதங்கள் பற்றியே பேச ஆசை பட்டேன் அதையே பகிர்கிறேன். இதில் பங்குபற்றிய நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும். இவை இத்தோடு இல்லாமல் இன்னும் இன்னும் முடிவிலியாய் தொடரவேண்டும் …..
எனவே தான் இங்கு தாமாக தோன்றி இங்க பல வெற்றிகளை கண்டு மக்கள் கலைகளை அவ்வப்போது மீட்டிக்கொள்ள செய்ய இப்படிப்பட்ட நாடக விழாக்கள் பங்கு வகிக்கின்றன. இவ்வாறான நாடக விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததையிட்டு பெரும் மகிழ்வடைகிறேன் கர்வமும் கொள்கிறேன் . அத்தோடு #சிவாலயா அரங்காற்றுகை குழு தொடர்ந்தும் கலைப்படைப்பு களை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்….
நன்றி..
என்றும் கலைஞனாகவும்
கலை விரும்பியாகவும்
🎭தமிழேந்தி🎭