க.பாலேந்திரா அவர்களின் ‘பிரத்தியேகக் காட்சி’

க.பாலேந்திரா அவர்களின் ‘பிரத்தியேகக் காட்சி’
ஏழு நாடகங்களும் பதிவுகளும் நூல் அறிமுகமும்
‘அரங்க நினைவலைகள்’ (நாடகம், நாடகப் பாடல்கள், ஆற்றுகைகள்)

சனிக்கிழமை 11.10.2025 மாலை 4:30க்கு லண்டனில்
St Andrews Church, 89 Malvern Avenue, Harrow HA2 9ER என்ற முகவரியில்

அரங்க நினைவலைகள் நிகழ்வில் க.பாலேந்திரா அவர்களின் நெறியாள்கையில் பல்வேறு காலங்களில் மேடையேற்றபபட்ட எட்டு நாடகங்களின் சிறு காட்சிகள் எமது லண்டன் நடிகர்களால் காட்சிப்படுத்தப்பட்டன. இவற்றில் ஆறு நாடகங்கள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அரங்க நினைவலைகள் நாடகம் : சம்பந்தம், போகிற வழிக்கு ஒன்று, காத்திருப்பு, பிரத்தியேகக் காட்சி, தரிசனம், பாடம், முகமில்லாத மனிதர்கள், பாரத தர்மம் ஆகிய நாடகங்களில் இருந்து…

ஆற்றுகையில் பங்கு பற்றும் கலைஞர்கள்: சந்தோஷ், செல்வி, யசோமன், ரமேஷ், குமரகுரு, வாசுதேவன், மனோ மனுவேற்பிள்ளை, விஜயகுமாரி, மாணிக்கம் சத்தியமூர்த்தி, ஆனந்தராணி பாலேந்திரா, க.பாலேந்திரா ஆகியவர்கள் பங்குபற்றி இருந்தனர்.

க.பாலேந்திராவின் 'பிரத்தியேகக் காட்சி' நூல் அறிமுகமும் 'அரங்க நினைவலைகள்' நாடக நிகழ்வும்