“கதிரைவேல் பெருமானே கருணைத் தேவே” நாட்டிய நாடகம்

திவ்யா சுஜேனின் கதிரைவேல் பெருமானே கருணைத் தேவே நாட்டிய நாடகம்–
பல நடன வடிவங்கள் இணைந்ததும் காண்பியங்களால் வியப்பூட்டியதுமான ஒரு படைப்பு-
——————————-
நானும் இந்த நாடகத்தில் எல்லாளானாக ஒரு பாத்திரமேற்க அழைக்கப்பட் டிருந்தேன், குழந்தைகளுடனும் துடிப்பும் வேகமும் நிறைந்த இளம் தலைமுறையுடனும் சேர்ந்து நாடகம் பழ்குவ்தும் நடிப்பதும் அதற்கும் மேலாக ஒரு நெறியாளரின் சொல் கேட்டு அந்தக் கட்டுப்பாட்டுக்குள் நிற்பதும் வேறொரு அனுபவம், இது அனுபவம் கலந்த ஒரு விவரணக் குறிப்பு என எண்ணி வாசியுங்கள்_)
———————————–
1, முன்னுரை
————————–
,கதிரைமலை கோவே கந்தவேளே நாட்டிய நாடகம் 95 நிமிட நேர நாட்டிய நாட கம் ஆகும். இதற்கான பிரதி யைத் தயாரித்தவர் திவ்யா சுஜேன். அவர்கள்அதன் நெறியாளரும் அவரே
அவருடன் உரையாடிய போது அவர் இந்த பிரதியைக் கதிர்காமக் கந்தனை மனதில் வைத்து அந்தக் கோயிலை சுற்றி நடந்த நிகழ்வுகள் தொன்மங்கள் வாய்மொழி கதைகள் இலக்கிய செய்திகள் சரித்திர ஆதாரங்கள் என்பனவற்றில் வரும் சில தகவல்களை வைத்து உருவாக்கி இருந்தமை தெரிய வந்தது
கதிர்காமம் பற்றியும் அங்கு இருக்கும் கந்தன் பற்றியும் பல கதைகள் உள
கந்தன், கந்தசுவாமி, கதிரமலைக் கந்தன், கந்தவேள், கதிரமலைக்கோ கதிரமலைக் கந்தவேள் என பல பெயர்களால் கதிர்காமக் கந்தன் அழைக்கப்படுகிறார்,
இபெயர்களுக்குப் பின்னால் ஒரு நீண்ட சமூக வரலாறும் அரசியல் வ்ரலாறும் சிந்தனை வரலாறும் உண்டு
இந்தக் கதை கந்தனை கதிரமலைக்கோவான கந்தவேளாக்கிய திவ்யா உருவாக்கிய கதை எனலாம்
அதாவது அவர் பார்வையில் கதிர்காமக் கந்தன்
கந்தன் கந்தவேளாகி இலங்கையில் எல்லா இனங்களுக்குமுரிய பொது தெய்வமாகி அனைவரையும் அணைக்கின்ற தெய்வமாக மாறியதாக திவ்யா ஒரு விளக்கம் அளிக்கின்றார்
அது இன்றைய காலத்திற்கும் தேவைக்கும் ஏற்றதாக அமைந்துமுள்ளது. கதிர் காமக் கந்தன் திருவிழா பெரு விழாவாக மாறி செல்வாக்குறக் காரணம் அதன் ஜனநாயகத் தன்மையும் கொண்டாட்டத் தன்மையும் அனைவரையும் உள்ளிழுக்கும் பண்பும் என கணநாத் ஒபயசேகரா போன்ற மானுடவியல் அறிஞர்களின் கருத்துக்களையும் திவ்யா உள்வாங்கி இருக்கிறார் போல தெரிகிறது
2,நாடகக் கோர்ப்பு
—————————–
சூரபத்மன் முருகன் மகாயுத்தம் நடப்பது [ பல முகங்களோடு சூரபத்மன் மோதுவது
சூரனை வெற்றிகொண்ட வெற்றிவேல் இலங்கையின் கதிர்காமத்தில் தங்க கந்தனும் அங்கு தங்கி விடுவது
முருகன் வள்ளியைக் கண்டு காதல் கொண்டு இலங்கையின் மாப்பிளையாகி கதிர்காமத்தில் மாணிக்க கங்கைக் கரையோரம் தங்கி விடல்
சீதையைத் தேடிவந்த ஹனுமான் இலங்கைக்குத் தீ வைத்த பின் தன் வாலை அந்தக் கங்கையில் நனைத்து தீயைப் போக்குதல்
வனமுறை வேடன் கந்தன் வேலைக் கண்டு குடிசை அமைத்து வழிபடல்
விஜயன் பட்கிலேறி தம்பபண்னை வந்து பின் தெற்கு நோக்கி கதிர்காமம் வரல்
அதன் பின்னர் சங்கமித்தை அரசு மரக்கிளையுடன் வடக்கே திருவடி நிலையில் வந்து இற்ங்கி புத்த பிக்குகளுடன் தெற்கு நோக்கிப் பிரயாணமாகி கதிர்காமம் வரல்
சங்கமித்தை திருவடி நிலை க்கு வெள்ளரசு மரக் கிளையுடன் வந்து கதிர்காமம் வரல்
துட்டகைமுனு கதிர்காமக் கந்தனை வணங்கி எல்லாளன் மீது படை எடுத்து வெற்றி கொள்ளல்
வடநாட்டு அரசன் ஒருவன் குழந்தை வேண்டிக் கதிர்காமம் வரல்
அவனுக்கு ஒரு குழந்தையை கதிரமலைகந்தன் அளிகக் அந்தக் குழந்தை அங்கு வளர்ந்து அழகிய பெண்ணாகக் காட்சி தர அவளைக் கண்டி ம்ன்னன் இராஜசிங்கன் விரும்பல்
அவனை பிரிட்டிஸ்படை கைது செய்தல்
என வரலாறும் தொன்மமும் பின்னி உருவாக்கப்பட 13 காட்சித் துண்டங்களைக் கொண்டதாக பிரதி உருவாக்கப்பட்டிருந்தது
ஒவ்வொரு காட்சியும் ஐந்து அல்லது பத்து நிமிடங்களைக் கொண்ட காட்சியாக அமைந்து இருந்தது
மொத்தமாக பிரதான காட்சித் துண்டுகள் ஆறு
கிளைக் காட்சிகள் ஏழு மொதமாக 13 காட்சித் துண்டங்கள்
விபரம் பின் வருமாறு.
1.சூர சம்ஹாரம்
2. ⁠வள்ளி திருமணம்
3. ⁠மாணிக்க கங்கை
3.1. வனமுறை வேடனுக்கு அருளியது
3.2 . ஹனுமன் வணங்கியது
4. மன்னர்கள்
4.1 விஜயன் கோயில் கட்டியது
4.2 சங்கமித்தை தீசனின் உதவியுடன் அரசமரம் நட்டது
4.3 எல்லாளன் துட்டகைமுனு யுத்தம்
5. வட இந்தியர்கள் வருகை
5.1 கல்யாணகிரி சுவாமி
5.2 பாலசுந்தரி பிறப்பு
5,3 அவள் மீது கண்டி அரசன் கொண்ட காதலும் பாலசுந்தரியக் கடத்திசெல்லத் திட்டமிடலும்
5,4 பின் ஆங்கிலேயர் கண்டி அரசனைக் கைத் செய்ய பால சுந்தரி பாது காக்கப்ப்டுகிறாள்
6. கதிர்காம பாத யாத்திரை
இதில் சர்வமத்தினரும் இணைகிறாரக்ள்
கதிர்காம விழா கோலகாலமாக நடைபெறுகிறது பல்லின மக்களும் கலந்து கொள்கிறர்கல்
முஸ்லீம் மக்கள் கொண்டாட்டத்தில் இணைந்தமை தில்லானாவில் சூபி இசையூடாக காட்டப்பட்டது
ஆரம்பத்தில் திருப்புகழ் புஷ்பாஞ்சலியும் , நிறைவில் சர்வ மத தில்லானாவும் இருந்தது
. தில்லானா வரிகள் சர்வமத இணைப்பாக அமைகிறது
அதன் வரிகள் இவை
எல்லா மதத்தினரும் அன்பொடு கூடுவீர்
பொல்லாப் பிரிவினையை முழுவதும் நீக்குவரே
சொல்லால் உணர்வால் கந்தனை மிக உகந்து\
இல்லத்துப் பிள்ளையெனத் தாம் கொள்வாரே
இந்தப்பாடலை எழுதி தில்லானவை அமைதவர் ராஜ் குமார் பாரதி
3 ஆவது காட்சி திருப்புகழை தழுவியது. வனமுறை வேடன் ஹனுமான் கங்கையில் வால் நனைத்தமை திருப்புகழ்ச் செய்திகள்
இவற்றை த்னித் தனிக் காட்சித் துண்டங்களாகவும் ரசிக்க்லாம் தொக்குப்பாக இணைத்தும் ரசிக்கலாம் அடன் வின்னியாசம் (Choreography)அப்படி அமைந்திருந்தது
துண்டம் துண்டமாக அமைந்த காட்சிகள் உரையால் இணைக்கப்பட்டன உரையின் போது மேடையில் அபிநயத்தால் அந்த உரை காட்சிப்படுத்தப்பட்டது
3.நாடகத்தில் இசையும் நடனமும்
———————————————-
தனக்கு கிடைத்த இந்திய இசை வல்லாளர்களின் துணையுடன் அந்தப் பிரதிக்கான ஒரு இசையை இசைக் கோர்வையை அவர் ஏற்கனவே உருவாக்கி விட்டார், அதற்கான மிகுந்த பிரயாசம் எடுத்திருப்பது தெரிகிறது
நாட்டிய நாடகத்தில் தரப்ப்படுகின்ற இசை நட்டுவாங்கம் என்பன நாடகத்தின் உயிர் எனலாம் இவை அனைத்தும் பொருந்தி உயிரோட்டமாக மேடையிலே அமைந்தால் அந்த நிகழ்வு தனி அர்த்தம் பெறும்
ஆனால் இங்கோ தயாரிக்கப்பட்ட ஒரு இசைக்கு வேகமாக ஆடுவது என்பது ஆடுபவரின் அல்லது நடிகர்களின் சுதந்திரத்தைக்கட்டுப்படுத்தி விடும் ஆபத்தும் உண்டு
அதே வேளை திட்டமிட்டு வெட்டி வெட்டி மிகச் செம்மைப்படுத்தப்பட்டுப் பதியப்பட்ட அந்த இசை கோர்வையானது மேடையில் உயிரோடு அல்லது உயிர்த் தன்மையோடு இசைக்கும் இசையை விட மிக அழகாகவும் அமைந்து விடும் வாய்ப்பும் உண்டு பின்னையதே இங்கு நடந்தேறியது
ஒர் தொடர் அழகியல், ஒரு செம்மைத்தன்மை ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இந்த இசைக் கோர்வையின் ஒலி ப்பதிவில் இருந்தது
இதை நான் குறிப்பிட காரணம் மேற்படி நாட்டிய நாடகம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட இசைக் கோர்வையையினடியாக எழுந்தமையினாலேயே
அந்த நாடகம் தனக்கான சாதகங்களையும் அதேபோல பாதகங்களையும் கொண்டிருந்தன என்பதையும் நாம் மறந்து விடலாகாது
இத்தனை சவால்களையும் மீறி இந்த நாட்டிய நாடகம் அனைவரையும் கவர்ந்த, அனைவரையும் வியப்படையச் செய்த ஒரு நாட்டிய நாடாக அமைந்ததன் பின்னணியினை அறிதல் சுவராஸ்யமான ஒரு கதையாகும்
இதற்கான உழைப்பு தொடர்ச்சியாக மூன்று மாதங்கள் என அறிந்தேன். இந்த இசைக் கோர்வையை தயாரிப்பதற்காக நெறியாளர் பல தடவைகள் தமிழ்நாடு சென்று வந்திருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள தனக்கு நெருக்கமான நடனக்காரர்களை இசை வல்லுனர்களை தன்னுடன் இணைத்து இருக்கின்றார். ராஜ்குமார் பாரதி அவர்கள் நெறியாளருகுக் கிடைத்த ஒரு அருமையான ஒரு வளவாளராகும்
கர்நாடக இசை மெல்லிசை நாட்டாரிசை ஹிந்துஸ்தானி இசை ஆகியவற்றிலே அவர் பாண்டித்தியம் பெற்றவர் கொள்ளுப் பாட்டன் மஹாகவி பாரதியார் போல
மேடையிலே பரத நடனமிடுவோர் நடன ஆசிரியரின் நட்டுவாங்கச் சொற்கட்டுகளு க்கு ஆடுவது மரபு இந்த நாடகத்திலே நட்டுவாங்கச் சொற்கட்டு ஒரு புறம் அமைய ராஜ்குமார் பாரதி கூறும் ஜதிக்கோர்வை கூறும் இன்னொரு புறம் அமைந்து ஆடல்களுக்கு ஒரு கனதியைத் தந்திருந்தன உணர்ச்சி பூர்வமாக பாதிரத்திற்கு ஏற்ப குரலை எடுத்தும் படுத்தும் அழுத்தியும் உச்சரிக்கும் விதம் ஆடாதோரையும் அடவைக்கும் மந்திர சக்தி வாய்ந்த்து அதனை நான் அனுபவித்து ஆடினேன்
4. நாடகமும் நடிகர்களும்
————————————
இசைக்கு உயிர் தருபவர்கள் நடிகர்கள் தமது உடல்மொழியால் அவர்கள் இசையைக் காட்சிப்படுத்துகிறாரக்ள் அவ்வண்ணம் காட்சிப்படுத்த 139 பேரை இதில் பயன்படுத்துகிறார் திவ்யா ஆறு வயது இளம் குழந்தைகள் தொடகக்ம் 83 வயது முதிர் கலைஞர்கள் வரை இந்த 130 பேருள் அடக்கம் இவர்களைத் தேர்ந்தெடுத்ததில் நெறியாளரின் பங்கு மிக முக்கியமானது
பின்வரும் மிகச் சிறந்த நடனக்காரர்கள் இதில் பங்கு பெற்றிருக்கிறார்கள்
அவர்களை அறிதல் நாடகத்தை மேலும் அறிய உதவும்
அனுமார் – கலாமண்டலம் மேஜர் சங்க பிரியதேஷ( 200 மாணவர்கள் கூடிய நடனப்பள்ளி நடத்துகிறார் ; கேரளாவில் கதகளி பயின்றவர்)இவரது 4 மாணவர்களும் இணைந்தனர்.
முருகன் – ஷமித ஹெட்டிகே ( பிரபல கண்டிய நடன ஆசிரியர் )
வள்ளி – திருமதி வித்யா அரசு( ஒடிசி, கரணங்கள், விலாசினி நடனம் , கண்டியன் , பரதநாட்டியம் , மோகினியாட்டம் ஆட வல்லவர் ; பத்மா சுப்ரமணியத்தின் மாணவி )
களரி – குரு மிருதுளா ராய் ( நாட்டிய நிகேதன் நடனப்பள்ளி இயக்குனர் கோயம்புத்தூர்)
சமகால நடனம் – இந்திக லக்மால் ( கொழும்பு பல்கலைகழக விரிவுரையாளர்)
, பிரதிப , உதுல ( கட்புல அரங்கேற்று கலைகள் பல்கலைக் கழக பட்டதாரிகள்)
ராஜசிங்கன் – நாடகக் கலைஞர் தேவிந்த
கைமுனு – குரு ரஞ்சித் பிரியங்க
கைமுனு படை – குரு ரவிபந்து வித்யாபதியின் மாணவர்கள்
எல்லாளன் பேரா, மௌனகுரு
எல்லாளன் படை மட்டக்களப்பு அரங்க ஆய்வுகூட மாணவர்களான
தினேஸ்
பிரணுஜா
யாழ்ப்பாண திருமறைக் கலாமன்ற மாண்வரான யூலியஸ் அன்ட்றூ
இவர்களுடன்கதக் கலைஞர்கள் சாஸ்திரநிபுண் ஹன்சா ஹிமவந்தி
மற்றும்சாஸ்திரபதி சாதர சுபதும்
யாழ்ப்பாணம் ராமநாதன் பல்கலைகழக பட்டதாரிகள்
தனேஷ் ,
பிரியசரவணன் ,
கேதாரணி ,
யாழினி
, பிரகாஷினி
கிழக்குப் பல்கலைக் கழக விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவ விரிவுரையாளர்
சஜித் அவரது மாணவர்கள்
கொழும்பில்பதும் சாமர மற்றும் அவரது மாணவர்கள்,
சஞ்சீவன் பரத கலைஞர்
இதில் பங்கேற்பதற்காக அபிநயக்ஷேத்ராவில் அரங்கேற்றம் செய்து புலம்பெயர்ந்த மாணவிகளான அவுஸ்திரேலியாவில் இருந்து
ஷ்ருதி கோபிநாத்
, லண்டனில் இருந்து காவியா திலீபன்
ஆகிய இருவரும் இருவரும் இலங்கைக்கு வந்திருந்தனர் எனவும் அறிகிறோம்.
5. பல்வேறு நடன வடிவங்கள்
—————————————
பரதம்
கதகளி
குச்சுப்புடி
களரிப் பயிற்று
மோகினி ஆட்டம்
கண்டிய நடனம்
முதலான பல்வேறு நடன வடிவங்கள் இதிலே இணைக்கப்பட்டிருக்கின்றன
ஈழத்து தமிழ் கூத்து நடனம் ஆகிய நடன வடிவங்கள் காட்சியை பொறுத்தும் இடம் அறிந்தும் இதிலே பயன்படுத்தப்பட்டிருந்தன
பங்குகொண்டோர் தத்தம் திறமைகளு டன் நெறியாள்ரின் நெறியாள்கை வழிக்காட்டலின் கீழ் இங்கு இணைந்து ஆற்றுகை செய்தனர் திறமைகளின் ஒன்று கூடலாகவும் அத் திறமைகளை ஒன்றிணைத்த திறமையின் வெளிப்பாடாகவும் இந்த ஆற்றுகை அமைந்திருந்தது
கதிர்காமக் கந்தனை சுற்றி பல்வேறு இனங்களும் திரளுவது போல அவரின் வரலாறு கூற பல்வேறு நாட்டிய வடிவங்களும் இசை வடிவங்களுடன் பல்வேறு நாட்டு பல்வேறு இனத்துக் கலைஞர்களும் இதிலே இணைக்கப்பட்டிருந்தனர்
நீண்ட தொரு வரலாறு கூறுவது இந்த நாட்டிய நாடகம்ஆயினும் பல காட்சிகளின் ஒரு தொகுப்பாகவே இது தயாரிக்கப்பட்டிருந்தது
6.நாடகக் காண்பியங்கள்
———————————–
இதற்கும் அப்பால் நாடகத்துக்கான காண்பியுங்கள் மிக முக்கியமா னவை,,,,,,காண்பியுங்கள் குறியீட்டுத் தன்மை பொருந்தியவை
காண்பியுங்களில் வரும் காட்சிகள் நிறங்கள் உடை வடிவமைப்புகள் அபிநயங்கள் முத்திரைகள் உடல் அசைவுகள் எல்லாமே குறியீட்டுத் தன்மை வாய்ந்தவை எடுத்துக்கொண்ட பொருளை வெளிப்படுத்து கின்றதில் இந்த காண்பியுங்கள் பங்கு மிக முக்கியமானது
காண்பியங்களை தூக்கலாக காட்டுவது ஒளி அமைப்பாகும்
பாத்திரங்கள் அணிந்து வரும் ஆடை ஆபரணங்களுக்கும் அவர்கள் நிகழ்த்தும் நிகழ்த்துகைக்கும்ஒளி வீச்சுகளுக்கு இடையிலே இயல்பு இருக்க வேண்டும் இந்த இயல்பு வரும் போதே ஆற்றுகை அழகியலாக மேடையிலே மாறும்
7.ஒளியமைப்பும் காட்சியமைப்பும்
———————————————–
மிகச் சிறந்த ஒளி அமைப்பு. அதனால் நாடகத்தின் ஆற்றுகை முறைமை அனைவரையும் கவர்ந்தது ஒளியமைப்பிற்கான சில விசேட விளக்குகளுடன் ஒளியமைப்பாளரையும் தமிழ் நாட்டில் இருந்து தருவித்திருந்தார் திவ்யா
அவரது பெயர் வெங்கடேஸ் கிருஸ்ணன்
சென்னையைச் சேர்ந்தவர் அவரும் அவரது குழுவினரும் முதல் நாள் ஒளி ஒத்திகை நடை பெற்ற்போது நாடகத்தை ஆற்றூகை நிலையில் உள்வாங்கிகொண்டார்கள் மறு நாள் அது அவர்களுக்குப் பெரும் உதவியாயிற்று
ஒளி வடிவமைப்பு
—————————–
பொட்டொளி பரப்பொளி பக்க ஒளி பின் பக்கம் இருந்து முன்னோக்கி பாயும் ஒளி என பல ஒளிவிளக்குகளை அவர்கள் கையாண்டு மேடையில் ஒளியால் ஓவியம் வரைந்தனர் எனலாம். அவர்கள். ஒளியமைப்பும் உடையமைப்பும் பாத்திர உணர்வுகளும் ஒன்றி இருந்தன போல எனக்குப் பட்டது
இந்த நாடகத்தை எனது அழைப்பின் பேரில் பல சிங்கள நாடகக் கலைஞர்களும் நாடக விமர்சகர்களும் வந்து பார்வையிட்டனர். அதில் ஒரு நாடக விற்பன்னர் காட்சிகளுக்கும் உணர்வுகளுக்கும் ஒளிக்குமிடையே இருந்த உறவினை மிகவும் சிலாகித்தார்
சில இடங்களில் ஒளி விஞ்சிவிட்டதனையும் அவர் கூறத் தவறவில்லை
8.உடைஅமைப்பும் ஒப்பனையும்
———————————————–
ஒப்பனைக் கலைஞர்களாகப் பின் வருவோர் செயல்பட்டனர்
அழகுக் கலை நிபுணர்
டயானா
சுரேகா
தேவி
யாழ்ப்பாணத்து நாடக ஒப்பனைக் கலைஞர்யூலியஸ் அன்ட்றூ
இவர்கள் நால்வரும் வெவ்வேறு இடங்களில் வைத்து 130 பேருக்கும் ஒப்பனை செய்தனர் ஏன அறிகிறோம் அனத்தையும் மேற்பார்வை செய்தார் நெறியளார் திவ்வியா சுஜென்
மூன்று பிரிவுகளாகப் பிரித்து இவர்கள் ஒப்பனை செய்தனர்
யூலியஸ் இந்நாடகத்தில் வரும் சூரபத்மன் அவனது அரக்கர்படைத் தலைவ்ர்கள் எல்லாளன் அவனது படைத்தண்ட நாயகர்கள் ஆகியோரின் உடைகளை அமைத்ததுடன் ஒப்பனையும் செய்திருந்தார்
கைமுனு விஜயன் சங்கமித்தை அக்கியோரின் உடைகள் இஸ்லாமிய பக்கீர்களின் உடைகள் வடநாட்டு கரரின் உடைகள் என்பன அவ்வக் கலாசர பாணியில் அமைகக்பப்ட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது
இவ்வண்ணம் பிரதி ஆற்றுகை காண்பியம்ஒலி ஒளி இசைவு உடை ஒப்பனை என்பவற்றுக்கு இடையே காணப்பட்ட ஒத்துழைப்பு காரணமாக அந்த மேடை நிகழ்வு பார்ப்போருக்கு ஒரு அழகியல் உணர்வை கொடுத்திருக்கலாம்
9.பங்கு கொண்டோர் பங்களிப்பு
————————————————–
நாடகத்தில் பங்கு கொண்ட 130 பேரும் மாறி மாறி பல்வேறு பாத்திரங்கள் ஏற்றனர்
கார்த்திகைப் பெண்களாக
காவடி எடுப்போராக மயில்களாக
பாதயாத்திரையில் பங்குகொள்ளும் யாத்திரிகர்களாக
விஜயனுடன் வரும் துணைவர்களாக
சங்க மித்திரையுடன் வ்ரும் பிக்குகளாக
எல்லாளன் துட்டகைமுனுவின் தண்டநாயகர்களாக் படை வீரர்களாக
பிரிட்டிஸ் அரசின் படைகளாக
என அடிக்கடி வேடம்மாறியபடி
சுசுறுப்பாக இயங்கியதை ஒப்பனையுடன்மேடஓரத்தில் நின்ற நான் அவதானித்தபடி நின்றேன்
அவர்கள் இயக்கமும் வேகமும் சுறு சுறுப்பும் ஆச்சரியம் தந்த்து நெறியாளார் தந்த பயிற்சி அது
இத்தனை காட்சிகளையும் காலம் மாற்றத்தையும் கொண்டு வருவதற்கு நிறைந்த கலைஞர்கள் தேவையல்லவா ?
நெறியாளர் முன்னே நான் சொன்னபடி திவ்யா 130 பேரை திரட்டி இருந்தார். இந்தத் திரட்டுதலுக்கு அவர் என்ன உத்திகளைப் பாவித்தாரோ தெரியவில்லை அது ஒரு பெரு முயற்சியாகவே ப்ட்டது
அந்த 130 பேர்களும் மாறி மாறி மேடையிலே தோன்றினார்கள்
நான் மேடையின் ஓரத்தில் ஒப்பனையை முடித்துக் கொண்டு எனது வரவு நேரம் நோக்கி ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தேன்.
இருந்து கொண்டே மேடைக்காட்சிகளையும் மேடையின் பின் புறம் நடக்கும் ஆயத்தக் காட்சிகளையும் அவதானித்துகொண்டிருந்தேன் பார்வையாளருக்கு ஒரு பக்கக்காட்சியே தெரிந்தது எனக்கோ இருபக்கக் காட்சிகளும் தெரிந்தன அது இன்னொரு வகை அனுபவம்
முன்னர் ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்து அடுத்தக் காட்சிகளில் நடிக்க வேண்டிய அதே நடிகர்கள் மிக மிக வேகமாக உடைகளை மாற்றிகொண்டு மேடைக்குள் பாய்ந்தார்கள்
அவர்களின் அவசரத்தை அந்தரத்தை பரபரப்பைப் பாரவையாளர் அறியார், உள்ளே இருந்தமையினால் நான் அவதானித்துக் கொண்டிருந்தேன் அவர்களின் சுறு சுறுப்பும் வேகமும் அர்ப்பணமும் என்னைப் பெரு வியப்பிலாழ்த்தின
மயில்களாக காவடி ஆடுவோராக ஒரு தொகைக்குழந்தைகள் 6 – 12 வயது வரை அடக்கமுடியுமா அச்சுட்டிக் குழந்தைகளை?
தமத் வரவு நோக்கி அவர்கள் அமர்ந்திருந்தார்கள் அவர்களுக்கோ முழு நாடகமும் இன்னதென்று தெரியாது தாம் என்ன செய்ய வேண்டும் என்பது மாத்திரமே தெரிந்திருந்தது. மேடை ஓரத்தில் என்னோடு இருந்து நாடகத்தை அவதானித்துகொண்டிருந்த சில பெற்றோர்கள் அந்தக் குழந்தைகள் குழப்படி செய்து சத்தம் போடாமல் மேற்பார்வை செய்துகொண்டிருந்தனர் பெற்றோரின் ஒத்துழைப்பின்றி இப்பெரும் நாடகம் மேடையேறியிருக்க முடியாது
ஆறு வயது குழந்தை தொடக்கம் 83 வயது கிழவர்கள் வரை நடிகர்கள் பல்வேறு வயது உடைய பல தலை முறைகள் இணைந்த நாடகம் இது
இது ஒரு அசுர சாதனை என்று கூற வேண்டும்
அப்படி நடித்த சிலரின்பெயர்களும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களின் பெயர்களும் மேலே தரப்பட்டுள்ள/ அவை உங்களுக்கு அந்த நாடக தயாரிப்பு பற்றி ஒரு புறவட்டப் படத்தை தரும் என நினைக்கிறேன்
10.சபையோரும் ஆற்றுகையும்
—————————————–
சபையோர் வெகுவாகக் கவரப்பட்டார்கள் என்பதை அவர்களுடைய எதிர்வினைகள் பதில் குறிகள் காட்டின
கைதட்டல்கள் ஆரவாரங்கள் சில நேரங்களில் வியப்பு நிறைந்த அமைதி என்பன அவர்களுடைய வெளிப்பாடாக இருந்து நாடகத்தை வழி நடத்தின
நாட்டிய சாஸ்திர ஆசிரியர் நடிகர்களையும் பார்வையாளர்களையும் சஹ்ருதயர் என்று அழைப்பர் சக இருதையர் என்று இதற்கு அர்த்தம் பார்ப்போர் ஆற்றுகையாளர் என இரு சாராரும் இணையும் போது தான் நாடகத்தின் இந்தச் சஹ்ருதய அழகியல் உணர்வு மிகுந்து இரு சாராருக்குமிடையே ஒரு ஒன்றுதல் ஏற்படும்
11. துண்டு துண்டாகக் காட்சியமைப்பு
—————————————————-
இந்த நாடகத்திற்கான இசையை, இசை கோர்வையை 95 நிமிட நேரம் முதல் முதலாக நெறியாளர் எமக்கு போட்டுக் காட்டிய போது சில குறிப்புகளைக் கூறினேன்
துண்டு துண்டாக காட்டப்பட்டு உச்சத்தை நோக்கி ஒரு நாடகக்கட்டமைப்பு விறு விறுப்புடன் செல்வதாக நாடகம் அமைக்கப்பட்டிருந்தது
13.பார்வையாளர் பலரகத்தினர் பல தரத்தினர்
———————————————————
பார்வையாளர் பல ரகத்தினர்
தமிழ் மொழி தெரிந்தோர் தெரியாதோர்\
திருப்புகழ் அறிந்தோர் அதனை அறியாதோர்
பாரதி பாடல் அறிந்தோர் அறியாதோர்
இலங்கை வரலாறு தெரிந்தோர் தெரியாதோர்
கதிர்காமம் பற்றி அதிகம் அறிந்தோர் ஒன்றுமே அறியாதோர்.
இதனை விட பிரதம விருந்தினரான இந்திய உயர் ஸ்தானிகரும் உதவியாளரும் இன்னும் சில சிங்கள நண்பர்களும் தமிழ் அறியாதோர் இவர்களுக்கு இந்த நாடகத்தைப் புரிந்து கொள்ள நாடகத்தின் ஓட்டத்தை சுருக்கமாக மும் மொழிகளிலும் வழங்கியிருந்திருக்கலாம் அல்லது அரம்ப உரை ஒன்று வழங்கியிருக்க்கலாம் என எண்ணத் தோன்றியது
14.ஆற்றுகைகள் அமைக்கப்பட்டிருந்த முறைமை மனதை அசைத்த காட்சிகள்
————————————————————————–
இந்த நாடகத்தை நான் இரண்டு பிரதான பிரிவுகளாக வகுப்பேன்
ஒன்று மெல்ல மெல்ல உணர்வை வளர்த்துக் கொண்டு சென்று உச்சத்துக்குச் சென்ற முதலாம் பாகம் மற்றது
அதன் பின்னல் நடந்த விழாக்களும் கொண்டாட்டங்களும் ஆன இரண்டாம் பாகம்
ஒருவேளை இத்தகைய நாடகங்களுக்கு இந்த இரண்டும் தேவையோ என்றும் எண்ணத் தோன்றியது
நாடகம் முடிந்த பிறகு நடைபெற்ற நாடகமான மூன்றாம் பாகமும் ஒன்று இருந்தது
அது நடித்து எல்லோருக்கும் அல்லது எல்லோரையும் கௌரவிக்கின்ற பாகம் மிக முதிர்ந்த கலைஞர் தொடக்கம் குழந்தைக் கலைஞர் வரை மேடையில் அவர்கள் நின்ற இடம் இருந்த இடம் தேடி வந்த நெறியாளர் வரிசை வழங்கியமை குறிப்பிடத்தக்க தொரு நிகழ்வாகும்
ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் நாடகம் பார்க்க வந்த மிகப் பெரும்பாலானோர் நாடகத்தின் இந்த மூன்று பாகங்களையும் அசையாது அமர்ந்திருந்து பார்த்தார்கள்
நாடகம் முடிந்த பின்னர் உடனே வெளியே சென்றிருக்க வேண்டியவர்கள் பாராட்டுரை வழங்கும் வரையும் பொறுத்திருந்தமை நெறியாளர் மீதும் நாடகம் நடித்தவர்கள் மீதும் அவர்கள் கொண்டிருந்த மதிப்பைக் காட்டுவதாக அமைந்திருந்தது என்று நாம் எடுத்துக் கொள்வதில் தவறில்லை
சுருகக்மாக உரைப்பின் கண்காட்சித் தன்மையும் காண்பியங்களும் இணைந்து பிரமாண்டத்தன்மை ஒன்றை இதற்கு அளிதிருந்த்து பிர்மாண்டம் என்பது மயங்க வைத்தல் ஆகும. ் நாடகம் உணர்வைத் தொட வேண்டும் உயிரை அசைக்க வேண்டும்
முருகன் வள்ளி காதல்
ஹனுமார் அட்டகாசம்
எல்லாளன் துட்டகைமுன் சந்திப்பும் சண்டையும்
பாலசுந்தரி கண்டி அரசன் சந்திப்பு மோதல்
கந்தனை நினைத்து உருகும் திவியாவின் அசைவும் முகபாவஙக்ளும்
தனது உணர்வுகளை அசைத்த காட்சிகள் என ஒரு நாடக விமர்சகர் என்னிடம் கூறினார்
காண்பியங்களால் பெரு வியப்பை ஏற்படுத்தினாலும்
உள்ளத்தையும் இந்நாடகம் தொட்டிருந்தது
என்பதற்கு அவர் கூற்றுகள் சான்றாயமைந்தன.
நன்றி
பேராசிரியர் சி. மௌனகுரு
https://www.facebook.com/maunaguru.sinniah/posts/pfbid0MWjLdri8c8JBV5AZiUa92MssQuVt7iTqXS8FBGcWncrQSyYsApZS4fXGbWig4RqJl

எல்லாளன் துட்ட கைமுனு மோதல் கண்டிய நடனக் குரு ரஞ்சித் பிரியன்கா துட்டகைமுனு பேராசிரியர் சி. மௌனகுரு எல்லாளனும் தோன்றும் காட்சி
https://www.facebook.com/maunaguru.sinniah/videos/796079696455921