தமிழர் தம் பண்பாட்டு மூல வேர்களில் அரங்க ஆற்றுகை கலைகளுக்கு தனிச் சிறப்பியல்புகள் உண்டு. அது ஆடல், பாடல், ஆற்றுகை, புதுமையான முயற்சிகள் என நீண்டு செல்லும் பட்டியலாகும். இந்த ஆற்றுகை சார் கலைகளை ஆவணப்படுத்துவதும் அடுத்துவரும் சந்ததிக்கு கையளிக்க உலக அளவில் அடையாளப்படுத்துவதும் அத்தியாவசிய கடமையாகிறது. இதனை ஒரு அரங்க தளத்தில் நின்று ஒன்று சேர்த்து உலகறியச் செய்ய நினைக்கிறது இந்த கூத்தகம் இணையம்.
நாம் ஆவணப்படுத்த வேண்டியவை நிறையவே உள்ளது. தடைகளைத் தாண்டி உலகப்பரப்பில் நம் அடையாளத்தை நிறுவ உலகம் முழுவதும் சிதறிகிடக்கின்ற அரங்க ஆளுமைகள், அரங்க கலைஞர்கள், அரங்ககக்குழுக்கள், அரங்க ஆர்வலர்கள் ஆகியவர்களுடன் இணைந்து இலங்கை, இந்தியா, புலம்பெயர்தேசம் ஆகிய மூன்று தளங்களில் இருந்து பயணிப்பதற்கு இந்த இணையதளம் உறுதுணையாய் இருக்கும்.
எனவே இந்த இணையத் தளம் உலகெங்கிலும் நடைபெற்ற, நடைபெறுகின்ற தமிழர் அரங்க செயற்பாடுகளை ஒன்றுதிரட்டி ஒரு பொதுத் தளத்தில் பதிவிடுகிறது .இது செய்தியாக, கட்டுரையாக, நூல் தொகுப்பாக, காணொளியாக, ஒலிப்பதிவாக மேலும் பல்வேறு வகைகளில் உங்களால் படிக்க ரசிக்கக் தமிழர்களுடைய அரங்கக்கலையை தெரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.